Friday, August 28, 2009

Bats by Sreedevi Nair

வவ்வால்கள்
கவலை அடைவதற்கு வவ்வால்கள்
தலைகீழாக தொங்குகின்றன.
அப்படி கவலை படும்போது
அதன் முன் ஜன்மங்களை
ஞாபக படுத்தி கொள்கின்றன .
அப்படி வருத்தமாய் இருப்பது
அவைகளுக்கு ஒரு சுத்த படுத்திக்கொள்ளும்
வழி.
இந்த கடுமையான வாழ்வின் இருட்டில்
இருந்து சுத்தபடுத்திக்கொள்ளும்
வழி.
இந்த சுத்தம் என்பது இரும்பை
காய்ச்சி அடிக்கும் போது
இரும்பு இளகுவதை போன்றது.
வவ்வால்களுக்கு மனிதர்களின்
எதார்த்தம் தெரியும்.
மனிதர்களுக்கு தெரியாமலேயே
மனிதர்களுக்குள் இருக்கும் எதார்த்தம்.

The bats , for us, symbolises nothing more than bats hanging upside down, regurgitating what has been eaten and digested; but for the poet , this seems to give a different scenario.

Thursday, August 27, 2009

Two Dogs by Sreedevi Nair

இரண்டு நாய்கள்
ஒரு பணக்காரனின் நாய்
ஏழையின் நாயை பார்த்து
பொறாமை பட்டது,
அது தன்னிச்சையாக
சுற்றி கொண்டிருந்ததை பார்த்து.
பணக்கார நாய்க்கு
வாழ்வதற்கும் ,சாவதற்கும் ,
காவலாளிகள் இருந்தார்கள்.
தெரு நாய்க்கு அதன் சாவு
சொந்தமாக இருந்தது.
அந்த சாவை முநிசிபாளிட்டியோ
கடைக்கரர்களோ பிடுங்கிக்கொள்ளமுடியாது .
பணக்கார நாய் அந்த ஏழை நாயின்
சாவை பிடுங்கிக்கொண்டு சந்தோஷமடைய
பார்த்தது.
அந்த ஏழை நாய் தன சாவை அடைய
தன்னிடம் வந்து கெஞ்ச வேண்டும் என
எதிர்பார்த்து.
அந்த சாவின் உரிமையை பிடுங்க
நினைத்தது.
ஆனால் இறப்பு பெரிய காற்றாக
அந்த பணக்கார நாய்க்கும்
தெரு நாய்க்கும் ஒன்றாக
வந்தது.
The irony is the rich dog even wants to have the right of the death of the poor dog.How richness goes beyond head and how heart is erased from the parlance of human existence.

Sans peace by Sreedevi Nair

அமைதியின்மை
கங்கையிலும் யமுனையிலும்
விடுதலையை தேடினேன்.
ஒவ்வொரு யாத்திரையின் போதும்
முடித்து கொள்ளலாம் என்றிருந்தேன்.
பசுக்கள் மேய போகின்றன ,
திரும்பி வருவதில்லை.
பறவைகளின் கூடுகள் காற்றில்
கீழே விழுந்து விடுகின்றன.
கடல் சீற்றத்தின் போது
மீன்கள் சிதறி எறிய படுகின்றன.
நெருப்பு,நீர்,காற்று, பிணம் ,
எல்லாவற்றின் முன்பு விழுந்து
வணங்கினேன்.
அரிசி கஞ்சி காய்ச்சி ,
எறும்பு,பூனை,காகம்,பிச்சைக்காரன்
எல்லோருக்கும் கொடுத்தேன்.

This poem shows the mind of those who don't really 'live' but pass on time to escape from this mortal coil; whose mind is explained in this poem to certain extent, and I believe an extension of the poem is needed .......... or the continuity of the poem is left to our imagination ?.

Singular by Sreedevi Nair

ஒருமை
=======
உடம்பு பன்மைதான்
மனதும் பன்மைதான்
உலகம் பன்மை
மொழி பன்மை
பெயரும் பன்மை.
மனது உடம்பை
விட்டு அகலும் போது
வார்த்தைகள் கவிதையை
விட்டு செல்லும் போது
வானம் மேகத்தை விட்டு
செல்லும் போது,
மலர்கள் மரத்தை விட்டு
செல்லும் போது ,
விடுதலை அடையும் போது,
ஒருமை என்னும் நான் பிறந்தேன்.
What the poet is trying to convery ......... is it a compromise between dualism and monism?

Poetic by Sreedevi Nair in Malayalam

கவித்துவமாக
வாழைபூ உதிர்வதை போல
பனித்துளிகள் பூக்களில் இருந்து
உதிர்வதை போல,
மேகங்கள் கருமையாக
மாறுகின்றன .
கவிதை எங்கேயோ
தொலைந்துவிட்டது .
எப்பொழுதெல்லாம் கவிதையை
நினைகின்றோமோ அப்பொழுதெல்லாம்
கவித்துவம் பொங்குகின்றது.
எந்த மலரும் கவிதை அல்ல .
கவித்துவமும் அடைய முடியாது.

Nothing more to say except being poetic in mood by reading this poem.

Words Again by Sreedevi Nair in malayalam

மறுபடியும் வார்த்தைகள்
எந்த வித தயையும் இன்றி
என்னுடைய வார்த்தைகள்
என்னை விட்டு சென்று விட்டன.
அநாகரீகமான வார்த்தைகள்
கவிதையாக மாற
முயன்றபோது நான் எதிர்த்தேன்.
வார்த்தைகள் சொன்னது:
நாங்கள் கவிதையாக மாறவேண்டும்.
கவிஞர்கள் எங்களுக்கு எதிரி!
வார்த்தைகள் கவிஞரை விட்டு
அவர் இடத்தை அடைய
முயன்றன.
எங்கே தளம் இருக்கிறது
வார்த்தைகள் கவிதையாக ?
வார்த்தைகள் சொன்னது:
நாங்கள் தளத்தை வாங்குகிறோம் .
வார்த்தைகள் உண்மையை
தேடின.
அந்த முயற்சியில் உலகயே
வாங்க .
முடிவில் முயற்சியில்
தோல்வியடைந்தன .
வாசலில் தனிமையில் நின்றன.
நான் கேட்டேன்:
என்ன நடந்தது?
வார்த்தைகள் சொல்லின:
நாங்கள் தோல்வியுற்றோம் .
தனிமையில் உண்மையை கண்டு
பிடிக்க முடியாது.
ஆனால் உண்மையை தேடுபவர்களுக்கு
எவ்வளவு தேவை அவ்வளவு கொடுக்க இயலும்.

Words per se don't and can't do anything on their own..... human intelligence ....... the poet only can and will...........this is like a newspaper owners even wanting to write , cant do since writer is a separate genre.

Prey by Sreedevi Nair

இரை
முன்னொரு நாள் இந்த
கோடைக்கால பறவைகள்
வந்தனவா ?
என்னை இந்த தசைகளால்
ஆனா கூண்டில் இருந்து
விடுவிப்பீர்களா ?
மனித தன்மை அற்ற
கோடை பாதைகளில் நான்
ஒரு உடம்பு மட்டும்தான் .
என்னை அப்படியே
விழுங்கி விடலாம்.
நான் ஒரு சரியான இரை .
சரியான இரை ஆவதற்கு
எதாவது வழியில் தயார்
செய்து கொள்ள வேண்டுமோ ?
நான் ஒரு இரை ஆவதற்கு
முடிவு செய்து விட்டேன்.
வாழ்வின் கஷ்டங்களை கண்டவர்கள்
எதை பற்றியும் குறை கூறுவதில்லை .
எல்லா வற்றையும் அனுபவித்தாயிற்று.
இவைகள் இல்லாதிருந்தால்
என்னுடைய வாழ்க்கை
முழுமையற்றதாகி இருக்கும்.
இப்பொழுது எல்லாம் புரிகிறது.
இரை,உடம்பு,வாழ்க்கை எல்லாம்.

Is human capable of grasping the reality behind human existence only after going through the path of difficulties,troubles, turbulence in life? Can't we comprehend the life we live while we are in the rat race? Is the incomprehensible comprehension eluding us?

Clouds by Sreedevi Nair

மேகங்கள்
மேகங்கள் மறைத்து கொண்டிருந்த
வானத்தை வேண்டும் என
வேண்டினேன் .
சப்தமான மழையினூடே
என்னுடைய தனிமை
புலியை போல பார்த்தது.
மேகங்கள் வானத்தை மறைத்ததை
அறிந்து கொள்ள
மழையினூடே இறங்கினேன்.
இரவின் பயமுறுத்தும்
இசையை போல வானம்
இருளாக இருந்தது.
மேகங்கள் கலைந்தபோது
மழையும் நின்று விட்டது.
இந்த மழையும் மேகங்களும்
கைகோர்த்து போஸ்ட் மாடர்ன்
குறியீடுகளை போல என்னை
கேலி செய்கிறதா ?
மேகங்கள் என்ன மழைக்கு
கைகாட்டிகளா ?
மேகங்களின் கைகாட்டிகள்
எங்கோ உறுமின .
மழையின் குறியீடுகள்
பன்மடங்காக மாறின,
எல்லா அர்த்தங்களையும்
எடுத்து கொண்டு.
மழைக்கும் மேகத்திற்கும்
புரியாத அர்த்தங்களை தன்னுள்
அடக்கிக்கொண்டு.

Wednesday, August 26, 2009

white egg by Sreedevi Nair in malayalam

வெள்ளை முட்டை
கருப்பு கோழியும் வெள்ளை
கோழியும் முட்டை இட்டன.
வெள்ளை முட்டைகள்!
இரண்டும் போட்டிபோட்டு
கருப்பு முட்டையிட முயன்றன.
முட்டை வெள்ளையாகத்தான்
இருந்தன.
வெள்ளைகொழி, கருப்புகொழி
இதில் திறமைசாலி யார?
வெள்ளை கோழி எல்லா
இடத்திலும் சென்று தான்
திறமைசாலி என்று பறை சாற்றியது.
கருப்பு கோழி கலவரப்பட்டது ,
தன்னுடைய வெள்ளை முட்டை
பொய்யானதா?
கருப்புகொழி வீணாக முயன்றது,
கருப்பு முட்டை இடுவதற்கு .

The colour complex in human beings is well explained in a subtle way, as is imagined by the fair skinned individuals and dark skinned individuals as well.

The following link is of importance regarding the colour complex written by a writer Jeyamohan

http://www.jeyamohan.in/?p=5971

Beggar woman by Sreedevi Nair

பிச்சைகாரி
நான் கண்ணை மூடி நின்றிருந்தேன்
சாலையில் சிறிது நேரம் .
குழந்தையை போல ,
உடலின் உள்ளே உள்ள
உறுப்புக்களை போல நடித்தேன்.
விழும் சில்லறைகளுக்கு குறைவில்லை.
என்னையே தேற்றிகொண்டேன்.
நான் கற்றுக்கொண்டேன் இந்த
தந்திரத்தை .
உலகம் என்னை சுற்றி
இயங்குகிறது.
பிச்சை எடுப்பது ஒரு
பழக்கமாக ஆகிவிட்டது.
சில்லறைக்கு மட்டுமல்ல
அன்பிற்கும் தான்.
பிச்சை எடுக்கும் வாழ்க்கை
எப்போதும் நிரந்திரமில்லை.
அது ஒவ்வொரு நிமிடதைபோல .
அது ஒரு அறிவு முதிர்ந்த நிலை.
எல்லா இடங்களிலும் வாழ்க்கை
இருப்பதில்லை.
அது ஒரு அறிவு,உள்ளிருக்கும்
காற்றைபோல.

words by Sreedevi Nair

வார்த்தைகள்
சில நேரங்களில் வார்த்தைகள் அம்புகள்
மற்ற நேரங்களில் தவளைகள் .
அது குதித்து கொண்டே நகரும்.
வார்த்தைகள் பல வகைகள் .
பச்சோந்திகள்,புறாக்கள், ட்ய்நஸரஸ் போல .
வார்த்தைகளுக்கு மட்டும் தான் நிறம் மாற
தெரியும்.
அவைகள் எப்பொழுதாவதுதான்
தன்னை பற்றி சிந்திக்கின்றன.
பேசும்போதும் சந்தோசம் அடையும் போதும்..
ஒரு வார்த்தை பேசப்படும்போது அதன்
தொடர்புகள் தேவையில்லை .,
எதுவும் தேவையில்லை.
வார்த்தைகள் எதை குறிக்கிறதோ
அப்பொழுது உயிரோட்டம் இல்லை..
வார்த்தைகளுக்கு உயிர் தேவையில்லை.
ஆனால் மனிதர்களுக்கு தேவை.
மனிதன் வார்த்தைகளை சீரழிக்கிறான்.

Night by Sreedevi Nair

இரவு
இரவு மழைத்துளியாக மாறி
மறைந்து கொண்டது .
ஒரு பறவையின் கருப்பான
இறகில் மறைந்து கொண்டது.
எங்கெல்லாம் பறவை பறந்து
சென்றதோ
அங்கெல்லாம் இரவு
சென்றது.
விடியல் வரும்போது ,
பறவை இறக்கை விரித்து அடித்த போது
இரவுக்கு வெறுமையாக இருந்தது .
இறக்கியில் இருந்து கையை விட்டு
கீழே விழுந்தது.

Thursday, August 20, 2009

Love's remains by Sreedevi Nair in Malayalam

Love's remains

அன்பின் மீதம்

இந்த மனதில் அன்பு இல்லை .

அன்பு விட்டு சென்ற மனதின்

நெருப்பிலிருந்து புகை மட்டும்தான்

கிளம்புகிறது.

மற்றவர்கள் தூக்கியெறிந்த

அன்பின் மீதங்களை

சேகரித்து அதை எரிப்பதுதான்

என்னுடைய விதியாகி இருக்கிறது .

நான் காத்திருந்தேன் அன்பின்

மீதங்களை சேகரிக்க ,

அதை தூக்கி எறிந்தவர்கள் ,

யுத்தகளத்திற்கு சென்றவர்கள் ,

பணத்தை திருட போனவர்கள்-

நான் எந்தவித புன்னியதுவமும்

பாராட்டவில்லை அவர்களைப்பற்றி .

எவ்வவளவு சுதந்திரமாக உள்ளேன்.

Wednesday, August 19, 2009

Different flowers by Sreedevi Nair in Malayalam / Tamil translation

Different flowers

வித்தியாசமான் மலர்கள்

என்னுடைய உடல் முழுவதும்

பல வகையான மலர்களால் ஆனது.

ஒரு மலர் சிவப்பு நிறம் பூசியது ,

ஹைபிச்கிஸ் மலரை போல .

பல மலர்களின் பெயர்கள் தெரியாது.

மலர்கள் அதிசயமான புதிர்களை

போல வாழ்கின்றன .

எந்த விதமான வித்தியாசமில்லாத

என்னுடைய உடம்பில் இருந்து

எந்த மலர்களையும் பறிப்பது இல்லை .

எனக்கு இந்த மலர்கள் தேவையும் இல்லை.

சில சமயம் வேறு மலர்களுக்காக தான்

இந்த பயணத்தை தொடர்கிறேன்.

Before the birth of silence by Sreedevi Nair in Malayalam / tr in Tamil

Before the birth of silence by Sreedevi Nair
அமைதி அவதறிக்கும் முன்னால்

ஒரு சப்தம் கேட்டது .
அது எல்லா வீடினுள்ளும் ,குளியல்
அறைகளுக்குள்ளும் சென்று வந்தது .
அது நிர்வானமகியது .
கடைத்வீதிகளிலும், குளங்களிலும் ,
ஜாடிகளிலும் , மோட்டார் வாகனங்களிலும்
சென்று திரும்பியது .
ஒரு துணையை தேடியது .
கிடைக்கவில்லை.
சப்தங்கள் எல்லாம் மாமிச பட்சினிகள் .
அதனுடைய குட்டிகளையே அவை
சாப்பிட்டுவிடும் .
பெரியவைகள் சின்னவற்றை
சாப்பிட்டுவிடும்.
சின்னவை பெரியவை மூச்சு
விடும் பக்கத்தில் கூட போகாது .
சிறிய மீன்களை போல சிறிய
சப்தங்கள் அங்கும் இங்கும்
ஓடுகின்றன.
சிறிய சப்தங்கள் உள்ளேயே
இருக்கின்றன ,
இல்லையேல் அவைகள் விழுங்கப்படும்
என்னும் பயத்தினால் .
அவை பிறப்பு எடுக்கும் முன்னேயே
வாழ துவங்குகின்றன .
அவைகள் தான் அமைதி.
அதனுடைய அர்த்தங்கள் எல்லாம்
குழப்பி வைக்கப்பட்டிருக்கின்றன .
ஆமாம், சில காலங்களில் வெறுமையே
மிஞ்சுகின்றன.
நாம் பிரக்கமட்டோம் என்று சத்தியம்
செய்துகொண்டு வாழ்கின்றன .
அவைகள் பிறப்பதற்கு முன்பு
அமைதி சப்தமாக மாற முடியுமா ?
இறப்பிற்கு பின்னால் இருப்பதை
அவைகள் எப்படி அறியும் .?


In search of me by Sreedevi Nair in Malayalam / tr to Tamil

In search of Me by Sreedevi Nair in Malayalam
transalated to Tamil
என்னை நான் தேடியபோது
என் விரோதிகளை நினைத்தேன் .
இந்த நகரத்தின் எங்கே ஆள் அரவம்
இல்லாமல் எதோ நாயசெத்து கிடப்பதை
போல உள்ள இடத்திற்கு சென்றேன் .
அங்கே என்னை காணவில்லை .
சவங்களை தலைகீழாக
தொங்கவிட்டிருந்தார்கள் .
கடைசி மூச்சு அந்த ஆட்டின்
மூக்கிலிருந்து வெளியேறுவதை
பார்த்தேன்.
'broiler' கோழிகள் அந்த
கொலையாளிக்கான கூண்டுகளில்
காதுகொண்டிருப்பதை பார்த்தேன்.
அரசாங்க அதிகாரிகள் அந்த எலும்பு துண்டுகளை
தேடி அந்த தெருக்களில் வந்தபோது
என்னை நான் கண்டுபிடிக்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்து நிர்வாணமாகி கட்டிலுக்கு
சென்றபோது என்னை காணவில்லை .
என்னை அனைத்து கொள்ளும் இடியாக
வந்தது நானா ?

An Empty Bottle by Sreedevi Nair in Malayalam

An Empty Bottle by Sreedevi Nair in Malayalam tr to Tamil
காலி பாட்டில்
காலி மினரல் தண்ணீர் பாட்டில்
சாலை ஓரத்தில் கிடக்கிறது .
அந்த சாம்பல் நிற பிப்சுப்ப்பான
பாட்டிலை கவனிக்காமல் கடந்து
போகிறார்கள்.
சில சிறுவர்கள் அந்த பாட்டிலை
கசக்கி பையினுள் இட்டு
செல்கிறார்கள் .
காலி பாட்டில் ஒரு தத்துவம் .
மனிதனும் காலி பாட்டில்
போலத்தான்.
காலி பாட்டில்கள் மட்டுமல்ல
மனிதர்களும் குப்பைதொட்டிகளில்
கிடக்கிறார்கள் கவனிப்பார்கள் இன்றி.
சாலை ஓர குப்பைகளில் உயிரோட்டம்
இருக்கிறது .
அங்கே எந்த துணையும் இன்றி ,
முகாந்திரம இன்றி ,ஆண் பெண் என்ற பாகு
பாடின்றி , பெண்ணீயம் இல்லாது
குப்பைகளில் கிடக்கிறார்கள்.
நன்றி சொல்லவேண்டும் ஜனநாயகத்திற்கு .
அரசாங்கத்திற்கு மனிதர்கள் தேவை இல்லை .
ஆனால் முகவரி,வீடு,வோட்டு ,பணம்
எல்லாம் தேவை.

Friday, August 14, 2009

wetness of rain by sreedevi nair /Tamil tr

மழையின் ஈரம்
மழையினூடே பார்த்த முகங்களை ஞாபக படுத்துங்கள்
முதியவர்கள் குழந்தைகள் ஆகிறார்கள்
குழந்தைகள் வேறு உலகத்திற்கு செல்கிறார்கள் -
அவர்கள் வயதை மறந்து .
மழை என்பது ஒவ்வொருவருடைய கற்பனை.
மழை என்பது
சுருக்கங்களையும் ,வலியையும் ,சந்தோஷங்களையும்
துக்கங்களையும்
மாற்றுகிறது .
ஒரே ராகம் தான் மழையில் கேட்கும் ,
ஒரே பாடல்தான் கேட்கும் ,
இந்த மழையின் சப்தத்தில்
முன்னே கேட்ட பழைய பாடல்கள் எல்லாம்
மறுபடியும் கேட்கும் .
அந்த உலகின் சட்டங்கள் எல்லாம் வித்தியாசமானவை .
அந்த உலகம் சிறகு விரித்து பறக்கும்போது ,
சப்தமிடும் தவளைகளும் , பறக்கும கரப்பான் பூச்சிகளும்,
மழையும் , அந்த இரவும் இணைந்து ,
இந்த உலகின் உணர்ச்சிகளுக்கு
மறுபக்கமாக அமைகின்றன .
இந்த உலகின் உணர்ச்சிகளை போலவே
இந்த மழையின் கூறிய அம்புகள்
கைவிடப்பட்டவர்களை கவலைப்பட வைக்கிறது .
மழைக்கு மனது இல்லை .
மழையை உணர முடிந்தவர்கள்
அவர்களுக்கும் ஒரு மனது இருக்கிறது என்ற
ரகஸ்யத்தை உணராதவர்கள் ஆகிறார்கள் .
மழை என்பது சரித்திர காலத்திற்கு முன்னால் இருந்து
ஒரு ரகச்யமாகவே இருக்கிறது.
விஞ்ஞானம் கண்டுபிடிக்க முடியாத
ரகச்யமாகவே இருக்கிறது!!!!!

When raining takes place, it brings happiness , nostalgia,sorrow and a comination of emotions to all those who feel or see ........ but for the poet this brings out like a video all the emotions,destitudes,frogs, cockroaches, darkness, sufferings, mindlessness of humans,transformations of emotions.......... for some, rain is a medium through which they travel down the memory lane and be in the past mastigating the happenings in the past ................