Sunday, May 31, 2009

The Painted Forms / Sreedevi Nair in Malayalam


வண்ண உருவங்கள்

பயமுறுத்தும் நிறங்களால் உருவங்கள்
அந்த 'கேன்வாசை' நிறைத்து இருக்கின்றன .
பல நிறங்களுடன் தூரிகையில்
இருந்து ஒழுகும் வண்ணங்கள் பேய்களை போல
அந்த கேன்வாசில் உள்ள உருவங்களை அழகுபடித்தன
இந்த வண்ணங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு
யார் இந்த உலகை பயனுள்ளதாக ஆக்குகிறார்கள் .
இந்த வண்ணங்கள் என்ன ஒரு பயங்கரமான
உண்மையின் பிரதிநிதிகளா அல்லது வாரிசுகளா ?
என்னுடைய வாழ்கையை வண்ணங்கலாக்காமல்
இருக்க நான் தூரிகையை கழுவி வைத்தேன் .
மனித உணர்ச்சிகள் என்ன பச்சை நிறமா ?
இயற்கை என்ன பச்சையா ?
இந்த இயற்கையின் பச்சையும் ஒரு முகமூடியா ?
வண்ணம் அடிக்கப்பட்ட முகங்களில்
உள்ள உணர்ச்சிகளை சுலபமாக அறிய
இந்த வாழ்க்கை சித்திரத்தை வன்ன்மடிக்காமல்
இருக்கலாம் .
இந்த கேன்வாசில் மேல் கண்ணுக்கு தெரியாத
வெற்றிடங்கள் மலருகின்றன .
முகமூடியை தூக்கி எறிந்த ஆத்மாவை தேடுவது
என்பது எப்போதும் சற்று விபரீதம்தான் .
சந்தோஷமான உணர்ச்சிகள் விபரீதங்கள் தான் .

A painter painting on a canvas is a normal thing in a serene atmosphere; but for this poet, paints dripping on the canvas are devils, colours are representations of terrible truth, and colourless , maskless faces on the cancas are easily detectable emotions................. 'Painted forms' are the masks far away from the TRUTH........,,,,,,,,,,,,,,,,

Tuesday, May 26, 2009

Time

Time / காலம்

வெள்ளி பூத்த அழகான என் ஞானத்தை
கருப்பு நிறமடித்து இருளில் தள்ளினேன் .
ஞானம் என்பது சொர்கமானால் ,
என்னுடைய உலகம் இருளில்
தடுமாறுகிறது .
நான் வேறோருவனாக விரும்பவில்லை .
எனக்கு மற்றொருவனுடிய கால் சுவடுகள்
தேவையில்லை .
காலம் என்னுடைய வழியில் சிலந்திகூடு
பின்னி இருப்பது தெரிகிறது .
சோர்வடைந்த அந்த காலத்தின் சுவர்களுக்கு
பின்னால் பார்த்தால் அங்கு ஒன்றும் இல்லை .
வாழ்கையின் சூட்சுமம் எல்லா இடத்திலும்
உண்மையாகவே இருக்கிறது .
என்னை சமாதான படுத்த காலம்
அணிந்திருக்கும் எல்லா உடைகளும் கீழே
விழுகின்றன .
என்னுடைய ஆத்மாவிலும் கூட நிறைய பாசாங்குகள்
இருக்கின்றன .
அந்த பாசாங்குகளை அகற்றி விட்டு நிர்மலமாக
இருக்க விரும்புகிறேன்.

How time silently brings about guises in our soul and how nature changes our inward and outward appearances,,,,,, is clearly brought out in this poem. When the guises are shed down
how beautifully we become child-like in our minds......... well that is what travelling from ignorance to innocence.........

Sunday, May 24, 2009

Plurality of Vision

Plurality of Vision / பன்மை பார்வைகள்

வெளி உலகத்தின் பிரம்மாண்டமான ஏமாற்றம் .
துணிமநிகளோ , காட்சிகளோ , அல்லது
எந்த பொருளும் என்னை சமாதான படுத்தாது.
தொட்டால் எல்லாம் பனிபோல உருகுகின்றன .
எல்லா பொருட்களுக்கும் பொதுவாக
ஏதாவது உள்ளதா ?
அப்படி இருந்தால் எல்லாம் ஒரே மொழியில்
பேசும் அல்லவா?
நான் மனதில் பார்ப்பதை கண்கள்
காணவில்லை .
என் கண்முன்னே என் கண்கள் கொண்டு வந்து
குவித்த அழகெல்லாம் எங்கேயோ ஒளிந்து
சென்றுவிட்டன .
என்னுடைய் இயற்கை என்னுடைய மனதில்
எங்கோ நாதம் எழுப்புகிறது .
காண முடியாத கண்களுக்கு அமைதி
உண்டாகட்டும் .
இந்த உலகில் எல்லாம் தெரிவது இல்லை .
எல்லாம் பார்வைக்கு அப்பாற்பட்டவை .
இதுதான் உலகம் என்று யார் வந்து நம்ப
வைக்க போகிறார்கள் .
மனதை மாற்றிகொல்லாமல் வாழ
முடியாதா ?
நான் என்னுடைய மனதை ஒவவொரு
நொடியிலும் மாற்றமுடியாது .

Although topic is 'plurality of vision' what is really said is not plurality; rather the unchangeable only vision present on this earth............ true vision.........perceptions change but inner vision is always one,,,,,,,,,,,, eh?

Saturday, May 23, 2009

Solitude / tr from malayalam thro' English

Solitude / தனிமை [ அல்லது ] ஏகாந்தம்
தனிமை என்ற உலகில் நான்
என் சோகங்களுக்கு ஒரு நினைவகம்
கட்டினேன் .
வண்ணத்து பூச்சிகள் போல் என்
நினைவுகள் பறக்கின்றன .
வருவேன் என்று சொன்ன நண்பர்கள்
கூப்பிடுவது கூட இல்லை .
துன்பத்தை தாங்குவது இப்போது
மனதின் வேலை இல்லை .
அது உடம்பின் உரிமை ஆகிவிட்டது .
துன்பங்களுக்கு வீடுகளோ நாடுகளோ
மொழிகளோ இல்லை .
அவைகள் ஒரு இடத்தில் துவங்கி மற்றுமொரு
இடத்துக்கு போகிறது.
என்னுடைய் உடல் இப்படி திரியும் துன்பங்களுக்கு
தங்கும் துறைமுகமாக முடியுமா ?
நான் நினைவுகளின் கடற்கரையில்
காத்திருக்கின்றேன் .
என் மனது மணல் துகள்போல் சிதறி இருக்கிறது .
வாழ்க்கை என்ன இந்த சிதரல்களா ?
நான் நடக்கும் பொது சில மனிதர்களின்
நினைவலைகள் வீசுகின்றன .
எல்லா மென்மையான உணர்ச்சிகளும்
கடுமையான இரும்பாகின்றன .
காலத்தின் தொடுதலினால் எப்படி
மாறிவிட்டேன் நான் !!!

Despite the seemingly normal life we all lead, how imperceptibly we all change and metamorphose throgh the passage of time is touched upon in her own inimitable style. And everyone is alone , is the truth enunciated here.

Scattered Rain

சிதறிய மழை
உயிர்பித்து ஒரு மழைத்துளி
என்னை
யாராவது என்னை அந்த தெரியாத
அன்பு பாதைக்கு அழைத்து செல்ல
வருவரா ?
அந்த ஆணியை போல குத்தும் மழைதுளிகளிடமிருந்து
வசவுகளையும் பெருமூச்சையும் பெற்றேன் .
என் கண்களில் காணும் காமத்தை அந்த
மழைத்துளிகள் திருட முடியுமா ?
ஏதோ உயிருள்ள பொருளைப்போல அந்த
மழைத்துளி என்னை அழைக்கிறது .
ஆனால் மழை என்கண்களுக்கு தெரியவில்லை .
மழை என்பது தகர்ந்து போன வாழ்க்கையின்
சிற்பங்களை போன்றது .
என்னுடைய மனது இன்னும் அமைதிபடவில்லை .
உடைந்து போன மனதின் கண்ணாடி துளிகளில்
இந்த மழையின் பிம்பங்கள் தெரிகின்றன .
மழையை தேடிக்கொண்டு நான் வானத்தையும்
என் மனதையும் பார்கின்றேன் .
என் அன்பு மழையாய் பொழியும் என்று
விரும்புகிறேன் .

The whole process of rain and raining and rain drops are symbols of love to the poet;
she compares the sky and her mind, and seeking love from both............ rather compassion.

Sunday, May 17, 2009

The Serpent's journey / by Sreedevi Nair in Malayalam

பாம்பின் பயணம்
அணைக்க வரும் கைகளில் நாம் ஏன்
கைரேகைகளை பார்க்க வேண்டும் ?
என்னை நிம்மதி படுத்தும் அலங்கார
அன்புள்ள மனதை பார்த்து அன்பு
செலுத்துகிறேன் .
மற்றுமொரு பகுதி என்பது என்பது
அந்த அன்பை பொழியும் கண்கள்
அந்த ஆளை பிடித்து நிறுத்தும் அன்பான கண்கள் .
அந்த கண்கள் என்ன உணருகிறது என்பதோ
அல்லது அதன் அழகோ எனக்கு தேவையில்லை .
அன்பொழுகும் வார்த்தைகள் எனக்கு தேவையில்லை
நாக்கிலிருந்து நழுவும் தேன் சொட்டும் வார்த்தைகள்
என்னுடைய கோபத்திற்கு
உணவாகாது .
அழகான உதடுகளை விட
உதடுகளின் உள்ளே உள்ள அழகான பற்களை விட
உதடுகளின் அன்பையே தேடுகிறேன் .
நான் என்னுடைய ஆன்மாவை உற்று நோர்க்கும்போது
இதை எல்லாம் பார்க்க முடிகிறது .
என்னுடைய நம்பிக்கைதான் என் மூச்சு .
என்னை தேடிக்கொண்டிருக்கும் அந்த மனதின்
அந்த மூச்சுகாற்றில் சந்தோஷப்படுகிறேன் .
அழகான மூக்கின் முனைகளையோ
அணைக்க வரும் அழகான கைகளையோ
நான் தேடவில்லை
அபூர்வமான அன்பையும்
அமைதியாக அரவணைக்கும் கைகளையும்
நினைத்து கொண்டிருக்கிறேன் .
கடுமையான் இதயத்தை விட
மென்மையான அன்புள்ள இதயத்தில்
இருக்க விழைகிறேன் .
என்னுடைய வழியை கால்களின் அழகோ
அல்லது அதன் அமைப்ப்போ
தீர்மானிப்பதில்லை .
என்னுடைய தளராத உறுதியுடன்
நான் மண்ணின் மேல் வைத்திருக்கும் உறுதியுடன் சேர்ந்து
ஒரு பாம்பை போல் என்னுடைய நினைவுகளில்
ஊடுருவிகறது .
என்னுடைய நினைவுகள் அந்த பாம்பின் பாதையை
முடிவில்லாமல் பின்பற்றுகின்றன.

The poet when goes into the inner recess of the mind, finds the truth of falsity of beauty.............
like lips, teeth, honeyed words, eyes ............... but cherishes the true love ............... the love that blossoms on the basis of inner beauty ............. so truthful ............... in its ramifications!!!
Words and 'physical' become meaningless in that world of beauty........................

Wednesday, May 6, 2009

The Fan / from Malayalam thro' English


மின் விசிறி

விசிறி சுழன்று கொண்டே இருக்கிறது
அது இந்த வெட்டி பசங்களை மதிப்பதில்லை
இவர்கள் காற்று வாங்க இங்கே வருகிறார்கள்
இவர்களுக்கு காற்று தருவது
தற்கொலைக்கு சமம்
சுழலுவதை என்னால் நிறுத்த முடியவில்லை
தலையும் உடம்பும் போட்டிபோட்டு கூட ,
இப்படி சுற்றுவது ஒரு வித்தியாசமான தலைவிதி
எவ்வளவு கேலியாக உள்ளது
எந்தவிதமான பற்றும் இல்லாமல் சுழன்று
கொண்டே இருப்பது. சொத்த்துக்களையும் விலாசங்களையும் தேடாமல்
அதை பற்றி நினைக்காமல் ,
அதற்க்கு தெரியும்
இதை பற்றி எல்லாம் நினைத்து
காலத்தை வீணாக்க வேண்டம் என்பது .
மின் விசிறி உறுதியானது
இதை எல்லாம் உதறிய உருவம் அது
மனிதர்களும் பொருள்களும் எளிதாக
மறக்கபடுபவை என்னும் உண்மையை
அது உறுதிபடுத்துகிறது .
The poetess does not like people who take advantage of those innocent people , and feels strongly about giving help to those who do not care a bit for those who help them; she feels it is suicidal to give help those who dont deserve it.
Another thing which makes us to sit up , is why people are in the rat race running after property , name and fame ceaselessly , without knowing the reality that nothing remains for ever and life is transient in this earth.............
Does she mean the wheel of Karma rotating ceaselessly without passion or any attachement whatever................?
Does she feel remorse when people dont realise that at present some people are fortunate enjoying without knowing the cause behind their enjoyment .............. why this wind of fortune blows in their direction.............. is she angry about these people.............
who just live not going beyond the veil of Maya [illusion]......................wasting all the life after money and materialistic objects.................Oh ...........