Tuesday, June 9, 2009

Body by Sreedevi Nair in Malayalam

Body / உடல்

பெண்ணின் உடல் என்பது பெண்தான்.
ஆனால் பெண் மனம் என்பது ஒன்றும் பெண் இல்லை.
உடல் என்ன ஆணை இடுகிறதோ அதற்கு
அடிபணிகிறேன் .
மற்றவர்கள் என்ன சொன்னார்களோ
அதிலிருந்த என் உடல் பற்றி நான்
அறிந்து கொண்டேன்.
என்னுடைய உடலை பற்றி தெரிந்து கொள்ள
விழைகிறேன்.
உடல் அழுக்கானதும் காமமும் உடையது
என்று சொல்கிறார்கள் .
வைத்தியர்கள் உடல் குப்பை என்று
சொல்கிறார்கள் .
புலவர்களுக்கு அது கனவு.
உடலுக்கு கனவு காண உரிமை இல்லை.
நான் கனவு காண்பதுவும் இல்லை.
உடலை பற்றிய அபிப்ராயங்கள் ஆண்களால்
உருவானது.
நான் என் உடலை காலை கடன்களை கழிக்கும்போது
மட்டும் தான் பார்க்கிறேன் .
அப்போது காமம் ஒன்றும் இல்லை.
உடல் புணர்ச்சியில் கூட உடல் என்பது இல்லை.
ஆனால் ஆண் பார்க்கிறான்.
கண்ணாடி என் உடலை சிதைத்து தான் காட்டுகிறது.
என்னுடைய் உடலை கண்ணாடியில் பார்க்கும்போது
நான் பயப்படுகிறேன்.
பரிதாப படுகிறேன்.
என்னுடைய் உடலில் எந்த காமமும் இல்லை.
என்னை யாரோ வேட்டையாட பின்னால் வருவது
போல உணருகிறேன்.
எனக்கு காமம் ஒன்றும் இல்லை.
மற்றவர்களின் காமம் அவர்களின் எணனன்களில்தான் .

Very clear presentation of human thoughts anout the female body; body does not have the differentiation........ but perception about the female body by males; Body does not have the sexuality , but people look at it with erotic thoughts have that in their minds.No real figure is reflected by the mirror is another angle of looking at the body in a poetical way with a tinge of physics and philosophy.

Sunday, June 7, 2009

Tree / a poem by Sreedevi Nair in Malayalam


Tree / மரம்

மரக்கிளைகளில் அமர்ந்திருந்த காற்று
எங்கே போனது.
பூமியில் இருந்து எழுந்த அந்த காற்றில்
தெரியாத கவிதைகளின் குறியீடுகள் .
காற்றின் தொடுதலில் உயிரின்
உயிர்ப்பு தெரிகிறது .
அந்த காற்று திரும்பி வரவே இல்லை.
அதற்கு பதிலாக மற்றொன்று வந்தது.
அந்த காற்று சொன்னது:
என்னுடைய பெயர் "அஷ்வதம் "
நான் ஒரு மரம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள்
வெட்டப்பெட்ட மரம்.
நான் காணாமல் போன என் வகை மரங்களின்
முகவரியை தேடி வந்தேன் .
மரம் என்பது ஒரு பாடல்.
பாடலின் ஒவ்வொரு பகுதிக்கும்
ஒரு முடிவு வார்த்தையும்
ஒரு உப வார்த்தையும் உண்டு.
அமைதியின் ஆழத்தில் இருந்து
முளைத்து எழும் மரம் ,
தானகவே அதன் சாவை அனைத்து கொள்கிறது .
மரம் மாண்பான சாவை விரும்புவதில்லை.
சாவை எதிர்ப்பது என்பது மரத்தின் தத்துவம்;
அதை கோடாலியால் வெட்டுவது என்பது
மனிதனின் தத்துவம்.
How beautifully the blowing wind,sprouting seed,tree's life and death are linked with one another with the background rustling of environmental protection; how man has swerved fromthe path of humanness by being brutal to felling trees before its dignified end. How the soul of the tree lives till its designated natural end [ as depicted in the poem ], by visiting the places where it lived, how extinction is pathetically looked at by the ' murdered' tree............... and how insensitive man has become to the environment he lives in . What better things remain to be said in a small poem like this on the topic " saving trees "

Saturday, June 6, 2009

Philosophy by Sreedevi Nair in Malayalam

Philosophy / தத்துவம்
எல்லா தத்துவங்களையும் துரத்திவிட்டு
நான் சுதந்திரம் பெற
நானே தத்துவமாக மாறிவிட்டேன் .
எல்லா மந்திரங்களும் சொல்லப்படவேண்டும் .
என்னுடைய மனதை தத்துவமாக்கி
மந்திரதிர்க்காக கடவுளை அங்கே அமர்த்தினேன்.
சரியானதையும் தவறுகளையும் கலந்து
கருப்பையும் வெள்ளையும் கலந்து ,
இப்போது உண்மை எது புராணம் எது
என்று மனம் குழம்புகிறது .
நம்முடைய மனதில் நாமே புனைந்த
சிறைகள் உள்ளன .
அங்கே வேதங்கள் இல்லை .
கூர்மையான வார்த்தைகளுக்கு காத்திருந்தேன் .
கிடைத்தது சோப்பை போல மென்மையானவை .
ஒட்டிக்கொள்ளும் மனதை தேடினேன் .
கிடைத்ததோ வழுக்கும் பாசிகள் .
காதலை தேடி அகராதிகளை ஆராதித்தேன் .
வந்த வார்த்தைகளோ முரன்பட்டவைகளே .
நம்முடைய பார்வைகளே நீதிகளாக
மாறுகின்றன .
அதனுடைய இயல்பாகவே அப்படி மாறுகின்றன .
அர்த்தங்கள் ஒன்றும் வரியாருக்கப்பட்ட விதிகளில்லை .
எல்லாம் வார்த்தைகளின் விதி.
Mind becomes a prison when we are unable to unlearn the 'learnt ideas' in our preconceived minds, and when it becomes empty we have voidness and nothing more. And the chantings and images disappear ......... pure Brahmam without colour , form, name and every conceivable thing merges with THAT and becomes THAT. Nothing more remains..........

Meaning by Sreedevi Nair in Malayalam

அர்த்தங்கள்
அந்தங்களை தேடி நாம்
எழுத்துகளிடம் போகின்றோம் .
எழுத்துக்களும் உபயோகப்படவில்லை .
யாரோ ஒருவருடைய அர்த்தங்களை
சுமந்து வரும் எழுத்துகளும் பயனற்றவை .
என்னுடைய பச்சை குத்தப்பட்ட மனதில்
எந்த விதமான சிதறிய அர்த்தங்களும் இல்லை .
அர்த்தமில்லா உலகில் வாழ்வது
மகிழ்ச்சியாக இருக்கிறது.
நுழைக்கப்பட்ட அர்த்தங்கள்
வாந்தி எடுக்கப்பட்ட உணவைபோல்
அருவருப்பாக உள்ளது .
அர்த்தங்கள் தொலைந்த வாழ்க்கை எனும் வீதியில்
மனது தனிமையாக இருக்கிறது .
மனித மனது எவ்வளவு வெறுமையாக
உள்ளது !
எல்லா எதிர்ப்பான அர்த்தங்களை சேகரித்து
உயிருடன் இருக்க முயற்சிப்போம்.
தலையெழுத்து அனுமதித்தால்தான்
புல்பூண்டு கூட வளரும்.
நேற்றைய அர்த்தங்களை தேடி
சங்கடங்களை சொத்தாக்கிநேன்
எல்லா அர்த்தங்களும் எதிர்ஆனவைதான் .
அர்த்தமில்லாதவைதான் என்னுடைய
அர்த்தங்கள் .
அர்த்தமில்லாதவைகளில்தான் அர்த்தங்கள்
உள்ளது .
அர்த்தமிலாமையில் தான் சொவ்கர்யமான நிலை.
நான் அர்த்தமில்லாத நீர் நிலைகளில்
வாழ்கிறேன்.

Very sincere in ventilating her feelings in the lines used ........... meanings of the words through
interpretations is never ending.Trying to find the meanings in the words used by others shall drive us to never-ending circus of going round round...........
So instead of trying to find the life through the words, we'd live as it comes, since no one knows what is awaiting us the very next moment........ It is so beautiful that no one knows for certainty
what is awaiting us............. if we are able to find meanings in all the happenings ............ life becomes dull , insipid and meaningless, so let us not be too much logically meaningful in our living.

Wednesday, June 3, 2009

Flowering Tree / Sreedevi Nair in Malayalam


பூத்துகுலுங்கும் மரம்
மலர்கள் என்னை குறியிட்டன
நான் ஒரு பூக்கும் மரம் என்று .
மலர்களை தேடி அவைகள் வந்தன .
மலர்களின் கனவுகள் உண்மை என்று
நினைக்கிறார்கள் பலர் .
நான் என்னுடைய கொடையால்
மலர்களை நிரப்பினேன் .
மலர் என்பது ஒரு செய்திஅல்ல .
மலர் ஒரு செய்தியாக கூடாது .
மலர்கள் உதிர்வதற்காகதான் .
நேற்று உதிர்ந்த மலர்கள் யாருக்கும்
தேவை இல்லை .
உதிர்ந்த மலர்களை நினைத்து கொண்டு
இருப்பது இயற்க்கைக்கு எதிரானது .
எங்கும் சாயாமல் பூத்து குலுங்கும் மரம்
தனிமையை உணரக்கூடாது.
தனிமை என்பது வேண்டுமென்றே
பெறப்படுவது .
தனிமையாக வாழ்க்கையை பார்த்தால்
வாழ்க்கை என்பது சலிப்பாக இருக்கிறது .
நான் பூக்களை உதிர்த்து விட்டு
என்னுடைய தனிமையை தனிமை படுத்தினேன் .
என்னிடம் பூத்த மலர்களுக்கு
நறுமணம் இல்லை .
முடிவாக மலர்கள் என்னை மறந்தன .
எந்த மலரும் என்னை அறியவில்லை .
ஒவ்வொரு மலரும் வேகமாக வளர
சென்று விட்டன.
வளர்ச்சி என்ன பாவமா ?
வளர்ச்சி முழுமையாகும் போது
அழகும் நறுமணமும் பெறபட்டாலும்
வீழ்ச்சி என்பது தவிர்க்கமுடியாதது .
எனக்கு சலிப்பாக இருக்கிறது .
மேல் நோக்கி மீண்டும் மீண்டும்
பார்த்து கொண்டு இருக்கும்போது
என்னை யாரவது கீழிறக்கி வைக்க
முடியுமா .

We could comprehend the motherly perspective in this poem............ expecting and longing for the children's affection and nothing more in return from them.Symbolism is perfect in humming the parental love towards the children.