Saturday, May 23, 2009

Scattered Rain

சிதறிய மழை
உயிர்பித்து ஒரு மழைத்துளி
என்னை
யாராவது என்னை அந்த தெரியாத
அன்பு பாதைக்கு அழைத்து செல்ல
வருவரா ?
அந்த ஆணியை போல குத்தும் மழைதுளிகளிடமிருந்து
வசவுகளையும் பெருமூச்சையும் பெற்றேன் .
என் கண்களில் காணும் காமத்தை அந்த
மழைத்துளிகள் திருட முடியுமா ?
ஏதோ உயிருள்ள பொருளைப்போல அந்த
மழைத்துளி என்னை அழைக்கிறது .
ஆனால் மழை என்கண்களுக்கு தெரியவில்லை .
மழை என்பது தகர்ந்து போன வாழ்க்கையின்
சிற்பங்களை போன்றது .
என்னுடைய மனது இன்னும் அமைதிபடவில்லை .
உடைந்து போன மனதின் கண்ணாடி துளிகளில்
இந்த மழையின் பிம்பங்கள் தெரிகின்றன .
மழையை தேடிக்கொண்டு நான் வானத்தையும்
என் மனதையும் பார்கின்றேன் .
என் அன்பு மழையாய் பொழியும் என்று
விரும்புகிறேன் .

The whole process of rain and raining and rain drops are symbols of love to the poet;
she compares the sky and her mind, and seeking love from both............ rather compassion.

No comments: