Tuesday, May 26, 2009

Time

Time / காலம்

வெள்ளி பூத்த அழகான என் ஞானத்தை
கருப்பு நிறமடித்து இருளில் தள்ளினேன் .
ஞானம் என்பது சொர்கமானால் ,
என்னுடைய உலகம் இருளில்
தடுமாறுகிறது .
நான் வேறோருவனாக விரும்பவில்லை .
எனக்கு மற்றொருவனுடிய கால் சுவடுகள்
தேவையில்லை .
காலம் என்னுடைய வழியில் சிலந்திகூடு
பின்னி இருப்பது தெரிகிறது .
சோர்வடைந்த அந்த காலத்தின் சுவர்களுக்கு
பின்னால் பார்த்தால் அங்கு ஒன்றும் இல்லை .
வாழ்கையின் சூட்சுமம் எல்லா இடத்திலும்
உண்மையாகவே இருக்கிறது .
என்னை சமாதான படுத்த காலம்
அணிந்திருக்கும் எல்லா உடைகளும் கீழே
விழுகின்றன .
என்னுடைய ஆத்மாவிலும் கூட நிறைய பாசாங்குகள்
இருக்கின்றன .
அந்த பாசாங்குகளை அகற்றி விட்டு நிர்மலமாக
இருக்க விரும்புகிறேன்.

How time silently brings about guises in our soul and how nature changes our inward and outward appearances,,,,,, is clearly brought out in this poem. When the guises are shed down
how beautifully we become child-like in our minds......... well that is what travelling from ignorance to innocence.........

No comments: