Solitude / தனிமை [ அல்லது ] ஏகாந்தம்
தனிமை என்ற உலகில் நான்
என் சோகங்களுக்கு ஒரு நினைவகம்
கட்டினேன் .
வண்ணத்து பூச்சிகள் போல் என்
நினைவுகள் பறக்கின்றன .
வருவேன் என்று சொன்ன நண்பர்கள்
கூப்பிடுவது கூட இல்லை .
துன்பத்தை தாங்குவது இப்போது
மனதின் வேலை இல்லை .
அது உடம்பின் உரிமை ஆகிவிட்டது .
துன்பங்களுக்கு வீடுகளோ நாடுகளோ
மொழிகளோ இல்லை .
அவைகள் ஒரு இடத்தில் துவங்கி மற்றுமொரு
இடத்துக்கு போகிறது.
என்னுடைய் உடல் இப்படி திரியும் துன்பங்களுக்கு
தங்கும் துறைமுகமாக முடியுமா ?
நான் நினைவுகளின் கடற்கரையில்
காத்திருக்கின்றேன் .
என் மனது மணல் துகள்போல் சிதறி இருக்கிறது .
வாழ்க்கை என்ன இந்த சிதரல்களா ?
நான் நடக்கும் பொது சில மனிதர்களின்
நினைவலைகள் வீசுகின்றன .
எல்லா மென்மையான உணர்ச்சிகளும்
கடுமையான இரும்பாகின்றன .
காலத்தின் தொடுதலினால் எப்படி
மாறிவிட்டேன் நான் !!!
Despite the seemingly normal life we all lead, how imperceptibly we all change and metamorphose throgh the passage of time is touched upon in her own inimitable style. And everyone is alone , is the truth enunciated here.
No comments:
Post a Comment