Sunday, May 17, 2009

The Serpent's journey / by Sreedevi Nair in Malayalam

பாம்பின் பயணம்
அணைக்க வரும் கைகளில் நாம் ஏன்
கைரேகைகளை பார்க்க வேண்டும் ?
என்னை நிம்மதி படுத்தும் அலங்கார
அன்புள்ள மனதை பார்த்து அன்பு
செலுத்துகிறேன் .
மற்றுமொரு பகுதி என்பது என்பது
அந்த அன்பை பொழியும் கண்கள்
அந்த ஆளை பிடித்து நிறுத்தும் அன்பான கண்கள் .
அந்த கண்கள் என்ன உணருகிறது என்பதோ
அல்லது அதன் அழகோ எனக்கு தேவையில்லை .
அன்பொழுகும் வார்த்தைகள் எனக்கு தேவையில்லை
நாக்கிலிருந்து நழுவும் தேன் சொட்டும் வார்த்தைகள்
என்னுடைய கோபத்திற்கு
உணவாகாது .
அழகான உதடுகளை விட
உதடுகளின் உள்ளே உள்ள அழகான பற்களை விட
உதடுகளின் அன்பையே தேடுகிறேன் .
நான் என்னுடைய ஆன்மாவை உற்று நோர்க்கும்போது
இதை எல்லாம் பார்க்க முடிகிறது .
என்னுடைய நம்பிக்கைதான் என் மூச்சு .
என்னை தேடிக்கொண்டிருக்கும் அந்த மனதின்
அந்த மூச்சுகாற்றில் சந்தோஷப்படுகிறேன் .
அழகான மூக்கின் முனைகளையோ
அணைக்க வரும் அழகான கைகளையோ
நான் தேடவில்லை
அபூர்வமான அன்பையும்
அமைதியாக அரவணைக்கும் கைகளையும்
நினைத்து கொண்டிருக்கிறேன் .
கடுமையான் இதயத்தை விட
மென்மையான அன்புள்ள இதயத்தில்
இருக்க விழைகிறேன் .
என்னுடைய வழியை கால்களின் அழகோ
அல்லது அதன் அமைப்ப்போ
தீர்மானிப்பதில்லை .
என்னுடைய தளராத உறுதியுடன்
நான் மண்ணின் மேல் வைத்திருக்கும் உறுதியுடன் சேர்ந்து
ஒரு பாம்பை போல் என்னுடைய நினைவுகளில்
ஊடுருவிகறது .
என்னுடைய நினைவுகள் அந்த பாம்பின் பாதையை
முடிவில்லாமல் பின்பற்றுகின்றன.

The poet when goes into the inner recess of the mind, finds the truth of falsity of beauty.............
like lips, teeth, honeyed words, eyes ............... but cherishes the true love ............... the love that blossoms on the basis of inner beauty ............. so truthful ............... in its ramifications!!!
Words and 'physical' become meaningless in that world of beauty........................

No comments: