Wednesday, April 29, 2009

Sea for sale / Sreedevi Nair


கடல் விற்பனைக்கு / மலையாளத்தில் ஸ்ரீதேவி நாயர்
______________________________________________
கன்னியாகுமரிக்கு சென்றபோது நான்
ஒரு கடலை கண்டேன் , அதை
திருடி நான் என் வீட்டுக்கு கொண்டு வந்தேன்

என் நண்பி கெட்டாள்:
எந்த வகையான கடல் அது
சோக கடலா ?
பழிவாங்கும் கடலா
அல்லது
கட்டிலில் இருக்கும் கடலா ?

நான் சொன்னேன் :
என் கடல் என்னுள் இருக்கும்
பெண் எனும் கடல்
ஒரு பெண்ணை வீட்டில் அடைக்க முடியுமா
அவள் மறுபடியும் கெட்டாள் :
வீட்டில் இருக்கும் பெண் ஒரு பகுதியே
முழுமையான பெண் வேறெங்கோ இருக்கிறாள்
நான் பார்த்த முழுமையான பெண்ணை நான் கொணர்ந்தேன்
ஆனால் அந்த பெண் கடலாக இருந்தால் அவ்வளவே
இந்த பெண் கடல் என்ன செய்யும் ?
இது படுக்கை அறையில் அடைப்படாது
பூஜை அறையில் .....
உப்பரிகையில் .........
வெராண்டாவில் ...............
அல்லது
மனதில் ?
நாம் சென்று கடைவீதியில் பார்க்கலாம் !!

Note:
The silence and reverberations of the words used in the poem, are deep and mostly silent like the sea; like sea the poem contains all - pearls, sharks,fishes,corals,sunken ships of the past,rays of bright sun penetrating the surface and reaching the deep waters. The words unsaid, give more meanings to the poem; sea and woman's mind are deep unfathomable by any ordinary humans............. containing the 'uncontainable' .............. trying to contain the sea is fruitless and foolish. Who can market the ' unmarketable' phenomenon and who under the sun could buy the 'unbuyable' infinity. Going to the market place is a wasteful endeavour............... but why the last line ? ................. is only to test the brilliance of the readers? .................. try to delve deep into your mind to perceive a part of the whole................. the whole sea is immeasurable and the deepness is incomprehensible to human mind..................and the sea can not be bought or sold in the market place............... why readers................. is it correct? Reflections of the reflections of the mind ........... never ending ................

Friday, April 24, 2009

Quarrelsome Kitchen Vessels By Sreedevi Nair /Tr into Tamil

>சண்டை இடும் சமையல் அறை சாமான்கள் என் சமையல் அறை சாமான்கள்
நிறைய விஷயங்கள் பேசுகின்றன
சினினாவை பற்றி
சமைப்பது பற்றி
இவை துணி உடுத்துவதை பற்றி கூட பேசுகின்றன .
சில விஷயங்களை பற்றி அவைகளுக்கு தவறான
அபிப்பிராயங்கள் இருக்கின்றன .
சில சமயங்களில் வேற்றுமையின் பொருட்டு
சண்டை இடுகின்றன
அதனால் கீழே விழுந்து தற்கொலைகள் கூட நிகழ்கின்றன .
எப்பொழுதும் குறை கூறும் முதியவர் போல
மனோ பாவம் அவைகளுக்கு இருக்கின்றன .
எப்படியும் நான் மரியாதையை காண்பிக்கிறேன்
அவைகளை வரிசையாக ஒழுங்காக வைக்கிறேன்
ஆனாலும் அவைகள் குதிக்கின்றன
சண்டை பல சமயம் கை கலப்பாகவும்
உடைந்து விழுவதிலும் முடிகிறது
நான் உறங்க செல்லும் பொதுகூட
அவைகள் உறங்குவதில்லை
அவைகள் எப்போதாவதுதான் உறங்குகின்றன
இரவு ஒன்று அல்லது இரண்டு மணிக்கு கூட
சண்டை இடுகின்றன
அவைகள் விஷயங்களை தீர்மானிக்கும பொழுது
பூனை வந்தால் கூட துரத்தி விடுகின்றன
கண்ணை இமைக்காமல் இரவு
பூராவும் என்னதான் செய்கின்றன இவைகள் ?
அமைதியாகவும் நேராகவும் நிற்கின்றன .
நான் வரும்போது என்னை கேலி செய்கின்றன
தாகம் எடுத்தால் கூட தண்ணீர் குடிப்பதில்லை
குளிப்பதும் இல்லை
என்னை நோக்கி புன்னகை செய்கின்றன
கண்ணீர் சிந்தி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்கின்றன
என்னை சந்தோஷமாக வைத்து கொள்வதற்காக நான்
நான் வெளியே செல்லும்போது அசையாமல் இருக்கின்றன
நான் திரும்பி வரும் வரை அப்படியே இருக்கின்றன

எனது சமையல் அறை சாமான்கள் அமைதியாய் இருப்பதற்கான
ஆயத்தம் செய்வது எவ்வளவு இதயத்தை துன்பப்படுத்தும்
செயல் என்பது
எனக்கு அவைகளை காணும்போது புரிகிறது !!!!!!

Note :
This Poetess is a strange happening to Poetry in India,When people live without communion despite the so called communication ,she has been able to maintain a communion even with inanimate objects like kitchen utensils, now we understand as to how a poet tries to contact the incomprehensible by maintaining a child-like innocence. When life is lived , forgetting the preconceived ideas, and the accumulated knowledge over million of years, mind perceives the 'the unknown' by casting away the 'known'
Well, utensils are not the direct meaning of the word used,................ you can imagine what she means when she says................. '"when I am going out..." , may be outer body experience and meditative super consciousness.............. when everything appears timeless and space less.......... both inanimate and animate................
Wednesday, April 15, 2009

sculpture and the sculptor / sreedevi nair in Malayalam

சிற்பமும் சிற்பியும்
------------------------
கூட்டம் கூடிக்கொண்டு இருக்கிறது
நிர்வாணமாக இருக்கும் பெண் சிலையை பார்ப்பதற்கு
ஒரு தேவதாரு மரத்தின் அருகே அந்த சிலை நிறுத்தப்பட்டு இருந்தது

நிர்வாணம் கவர்ச்சியா என்ன ?
சிற்பி நிர்வாணத்தை காதலித்தான்
எல்லா அவயவங்களையும் முழுமையாக படைத்து இருந்தான்
காமம் சிலைக்கு தேவைப்படவில்லை --ஆனால்
பார்ப்பவர்களுக்கு தேவை இருந்தது
அந்த புணர்தல் சுகம் சிலைக்கு தேவை என்றிந்தாலும்
சிற்பி சிலைக்கு அந்த சுகம் வேண்டாம் என்றிருந்தான்

சிற்பி சொன்னான் :
நீ ஒரு சிலை மட்டும்தான்
உன்னுடைய முகமும் மார்பகங்களும்
உன்னுடைய உடம்பும் எல்லாம் பார்பவர்க்களுக்குதான்
நீ அங்கே சும்மா நின்றுகொண்டிறு
உன்னை அங்கே கூடும் கூட்டந்தான் என்ன செய்ய வேண்டும்
என்று தீர்மானிக்கும்
உனக்கு புணர்ச்சிக்கு அனுமதி கிடையாது
நீ கண்களை திறக்க வேண்டும்
அதனால் காமத்தை தூண்டவேண்டும்
அவசியமென்றால் நீ சிறிது சாய்ந்து நிற்கலாம்
வேண்டுமானால் படுத்து கொள்ளலாம் நீளமாக

சிலை கேட்டது:

எவ்வளவு காலம் தேவைப்படும்
புணர்ச்சி என்ன என்று தெரிந்துகொள்ள ?

சிற்பி பதில் அளித்தான் :

ரொம்ப காலம் காத்திருக்க வேண்டாம்
காத்திருந்தால் பைத்தியமாகி விடுவாய்
உன்னுடைய காம தேவைக்கு உனக்கு உரிமை இல்லை
நீ ஒரு காட்சி பொருள் அவ்வளவே
இதை கேட்ட சிலை அதிர்ந்தது
அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியான நடுக்கத்தில் இருந்து
ஒரு பொறி கிளம்பி தீப்பிடித்தது
சிலை கருகியது அந்த தீயில் !!!!!

Note: Every poem of this author leaves much space behind the lines and in between the lines, where if concentrated , many more dimensions of the words used and the meanings hidden come out; does the sculpture belong to the sculptor once it is made? What right the sculptor has over the sculpture? ...... except the fact that he made it........ Can he control the sculpture.............. certainly not.
Even those who think they possess inanimate and animate ... the very thinking is a fallacy.Those who are dominated by others are living ' the death' than living .
At last everything is lost............ and loss to all. Loss to one who thinks he possesses and loss to the "possessed"
Let us stop here......... leaving the rest to the readers for their ingenuity.