Tuesday, June 9, 2009

Body by Sreedevi Nair in Malayalam

Body / உடல்

பெண்ணின் உடல் என்பது பெண்தான்.
ஆனால் பெண் மனம் என்பது ஒன்றும் பெண் இல்லை.
உடல் என்ன ஆணை இடுகிறதோ அதற்கு
அடிபணிகிறேன் .
மற்றவர்கள் என்ன சொன்னார்களோ
அதிலிருந்த என் உடல் பற்றி நான்
அறிந்து கொண்டேன்.
என்னுடைய உடலை பற்றி தெரிந்து கொள்ள
விழைகிறேன்.
உடல் அழுக்கானதும் காமமும் உடையது
என்று சொல்கிறார்கள் .
வைத்தியர்கள் உடல் குப்பை என்று
சொல்கிறார்கள் .
புலவர்களுக்கு அது கனவு.
உடலுக்கு கனவு காண உரிமை இல்லை.
நான் கனவு காண்பதுவும் இல்லை.
உடலை பற்றிய அபிப்ராயங்கள் ஆண்களால்
உருவானது.
நான் என் உடலை காலை கடன்களை கழிக்கும்போது
மட்டும் தான் பார்க்கிறேன் .
அப்போது காமம் ஒன்றும் இல்லை.
உடல் புணர்ச்சியில் கூட உடல் என்பது இல்லை.
ஆனால் ஆண் பார்க்கிறான்.
கண்ணாடி என் உடலை சிதைத்து தான் காட்டுகிறது.
என்னுடைய் உடலை கண்ணாடியில் பார்க்கும்போது
நான் பயப்படுகிறேன்.
பரிதாப படுகிறேன்.
என்னுடைய் உடலில் எந்த காமமும் இல்லை.
என்னை யாரோ வேட்டையாட பின்னால் வருவது
போல உணருகிறேன்.
எனக்கு காமம் ஒன்றும் இல்லை.
மற்றவர்களின் காமம் அவர்களின் எணனன்களில்தான் .

Very clear presentation of human thoughts anout the female body; body does not have the differentiation........ but perception about the female body by males; Body does not have the sexuality , but people look at it with erotic thoughts have that in their minds.No real figure is reflected by the mirror is another angle of looking at the body in a poetical way with a tinge of physics and philosophy.

No comments: