Sunday, June 7, 2009

Tree / a poem by Sreedevi Nair in Malayalam


Tree / மரம்

மரக்கிளைகளில் அமர்ந்திருந்த காற்று
எங்கே போனது.
பூமியில் இருந்து எழுந்த அந்த காற்றில்
தெரியாத கவிதைகளின் குறியீடுகள் .
காற்றின் தொடுதலில் உயிரின்
உயிர்ப்பு தெரிகிறது .
அந்த காற்று திரும்பி வரவே இல்லை.
அதற்கு பதிலாக மற்றொன்று வந்தது.
அந்த காற்று சொன்னது:
என்னுடைய பெயர் "அஷ்வதம் "
நான் ஒரு மரம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள்
வெட்டப்பெட்ட மரம்.
நான் காணாமல் போன என் வகை மரங்களின்
முகவரியை தேடி வந்தேன் .
மரம் என்பது ஒரு பாடல்.
பாடலின் ஒவ்வொரு பகுதிக்கும்
ஒரு முடிவு வார்த்தையும்
ஒரு உப வார்த்தையும் உண்டு.
அமைதியின் ஆழத்தில் இருந்து
முளைத்து எழும் மரம் ,
தானகவே அதன் சாவை அனைத்து கொள்கிறது .
மரம் மாண்பான சாவை விரும்புவதில்லை.
சாவை எதிர்ப்பது என்பது மரத்தின் தத்துவம்;
அதை கோடாலியால் வெட்டுவது என்பது
மனிதனின் தத்துவம்.
How beautifully the blowing wind,sprouting seed,tree's life and death are linked with one another with the background rustling of environmental protection; how man has swerved fromthe path of humanness by being brutal to felling trees before its dignified end. How the soul of the tree lives till its designated natural end [ as depicted in the poem ], by visiting the places where it lived, how extinction is pathetically looked at by the ' murdered' tree............... and how insensitive man has become to the environment he lives in . What better things remain to be said in a small poem like this on the topic " saving trees "

No comments: