Philosophy / தத்துவம்
எல்லா தத்துவங்களையும் துரத்திவிட்டு
நான் சுதந்திரம் பெற
நானே தத்துவமாக மாறிவிட்டேன் .
எல்லா மந்திரங்களும் சொல்லப்படவேண்டும் .
என்னுடைய மனதை தத்துவமாக்கி
மந்திரதிர்க்காக கடவுளை அங்கே அமர்த்தினேன்.
சரியானதையும் தவறுகளையும் கலந்து
கருப்பையும் வெள்ளையும் கலந்து ,
இப்போது உண்மை எது புராணம் எது
என்று மனம் குழம்புகிறது .
நம்முடைய மனதில் நாமே புனைந்த
சிறைகள் உள்ளன .
அங்கே வேதங்கள் இல்லை .
கூர்மையான வார்த்தைகளுக்கு காத்திருந்தேன் .
கிடைத்தது சோப்பை போல மென்மையானவை .
ஒட்டிக்கொள்ளும் மனதை தேடினேன் .
கிடைத்ததோ வழுக்கும் பாசிகள் .
காதலை தேடி அகராதிகளை ஆராதித்தேன் .
வந்த வார்த்தைகளோ முரன்பட்டவைகளே .
நம்முடைய பார்வைகளே நீதிகளாக
மாறுகின்றன .
அதனுடைய இயல்பாகவே அப்படி மாறுகின்றன .
அர்த்தங்கள் ஒன்றும் வரியாருக்கப்பட்ட விதிகளில்லை .
எல்லாம் வார்த்தைகளின் விதி.
Mind becomes a prison when we are unable to unlearn the 'learnt ideas' in our preconceived minds, and when it becomes empty we have voidness and nothing more. And the chantings and images disappear ......... pure Brahmam without colour , form, name and every conceivable thing merges with THAT and becomes THAT. Nothing more remains..........
No comments:
Post a Comment