சிற்பமும் சிற்பியும்
------------------------
கூட்டம் கூடிக்கொண்டு இருக்கிறது
நிர்வாணமாக இருக்கும் பெண் சிலையை பார்ப்பதற்கு
ஒரு தேவதாரு மரத்தின் அருகே அந்த சிலை நிறுத்தப்பட்டு இருந்தது
நிர்வாணம் கவர்ச்சியா என்ன ?
சிற்பி நிர்வாணத்தை காதலித்தான்
எல்லா அவயவங்களையும் முழுமையாக படைத்து இருந்தான்
காமம் சிலைக்கு தேவைப்படவில்லை --ஆனால்
பார்ப்பவர்களுக்கு தேவை இருந்தது
அந்த புணர்தல் சுகம் சிலைக்கு தேவை என்றிந்தாலும்
சிற்பி சிலைக்கு அந்த சுகம் வேண்டாம் என்றிருந்தான்
சிற்பி சொன்னான் :
நீ ஒரு சிலை மட்டும்தான்
உன்னுடைய முகமும் மார்பகங்களும்
உன்னுடைய உடம்பும் எல்லாம் பார்பவர்க்களுக்குதான்
நீ அங்கே சும்மா நின்றுகொண்டிறு
உன்னை அங்கே கூடும் கூட்டந்தான் என்ன செய்ய வேண்டும்
என்று தீர்மானிக்கும்
உனக்கு புணர்ச்சிக்கு அனுமதி கிடையாது
நீ கண்களை திறக்க வேண்டும்
அதனால் காமத்தை தூண்டவேண்டும்
அவசியமென்றால் நீ சிறிது சாய்ந்து நிற்கலாம்
வேண்டுமானால் படுத்து கொள்ளலாம் நீளமாக
சிலை கேட்டது:
எவ்வளவு காலம் தேவைப்படும்
புணர்ச்சி என்ன என்று தெரிந்துகொள்ள ?
சிற்பி பதில் அளித்தான் :
ரொம்ப காலம் காத்திருக்க வேண்டாம்
காத்திருந்தால் பைத்தியமாகி விடுவாய்
உன்னுடைய காம தேவைக்கு உனக்கு உரிமை இல்லை
நீ ஒரு காட்சி பொருள் அவ்வளவே
இதை கேட்ட சிலை அதிர்ந்தது
அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியான நடுக்கத்தில் இருந்து
ஒரு பொறி கிளம்பி தீப்பிடித்தது
சிலை கருகியது அந்த தீயில் !!!!!
Note: Every poem of this author leaves much space behind the lines and in between the lines, where if concentrated , many more dimensions of the words used and the meanings hidden come out; does the sculpture belong to the sculptor once it is made? What right the sculptor has over the sculpture? ...... except the fact that he made it........ Can he control the sculpture.............. certainly not.
Even those who think they possess inanimate and animate ... the very thinking is a fallacy.Those who are dominated by others are living ' the death' than living .
At last everything is lost............ and loss to all. Loss to one who thinks he possesses and loss to the "possessed"
Let us stop here......... leaving the rest to the readers for their ingenuity.
No comments:
Post a Comment