>சண்டை இடும் சமையல் அறை சாமான்கள் என் சமையல் அறை சாமான்கள்
நிறைய விஷயங்கள் பேசுகின்றன
சினினாவை பற்றி
சமைப்பது பற்றி
இவை துணி உடுத்துவதை பற்றி கூட பேசுகின்றன .
சில விஷயங்களை பற்றி அவைகளுக்கு தவறான
அபிப்பிராயங்கள் இருக்கின்றன .
சில சமயங்களில் வேற்றுமையின் பொருட்டு
சண்டை இடுகின்றன
அதனால் கீழே விழுந்து தற்கொலைகள் கூட நிகழ்கின்றன .
எப்பொழுதும் குறை கூறும் முதியவர் போல
மனோ பாவம் அவைகளுக்கு இருக்கின்றன .
எப்படியும் நான் மரியாதையை காண்பிக்கிறேன்
அவைகளை வரிசையாக ஒழுங்காக வைக்கிறேன்
ஆனாலும் அவைகள் குதிக்கின்றன
சண்டை பல சமயம் கை கலப்பாகவும்
உடைந்து விழுவதிலும் முடிகிறது
நான் உறங்க செல்லும் பொதுகூட
அவைகள் உறங்குவதில்லை
அவைகள் எப்போதாவதுதான் உறங்குகின்றன
இரவு ஒன்று அல்லது இரண்டு மணிக்கு கூட
சண்டை இடுகின்றன
அவைகள் விஷயங்களை தீர்மானிக்கும பொழுது
பூனை வந்தால் கூட துரத்தி விடுகின்றன
கண்ணை இமைக்காமல் இரவு
பூராவும் என்னதான் செய்கின்றன இவைகள் ?
அமைதியாகவும் நேராகவும் நிற்கின்றன .
நான் வரும்போது என்னை கேலி செய்கின்றன
தாகம் எடுத்தால் கூட தண்ணீர் குடிப்பதில்லை
குளிப்பதும் இல்லை
என்னை நோக்கி புன்னகை செய்கின்றன
கண்ணீர் சிந்தி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்கின்றன
என்னை சந்தோஷமாக வைத்து கொள்வதற்காக நான்
நான் வெளியே செல்லும்போது அசையாமல் இருக்கின்றன
நான் திரும்பி வரும் வரை அப்படியே இருக்கின்றன
எனது சமையல் அறை சாமான்கள் அமைதியாய் இருப்பதற்கான
ஆயத்தம் செய்வது எவ்வளவு இதயத்தை துன்பப்படுத்தும்
செயல் என்பது
எனக்கு அவைகளை காணும்போது புரிகிறது !!!!!!
Note :
This Poetess is a strange happening to Poetry in India,When people live without communion despite the so called communication ,she has been able to maintain a communion even with inanimate objects like kitchen utensils, now we understand as to how a poet tries to contact the incomprehensible by maintaining a child-like innocence. When life is lived , forgetting the preconceived ideas, and the accumulated knowledge over million of years, mind perceives the 'the unknown' by casting away the 'known'
Well, utensils are not the direct meaning of the word used,................ you can imagine what she means when she says................. '"when I am going out..." , may be outer body experience and meditative super consciousness.............. when everything appears timeless and space less.......... both inanimate and animate................
No comments:
Post a Comment